பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி: 12 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த மாதத்தில் ஜிஎஸ்டியாக ரூ.1,49,577 கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டை விட இது 12 சதவீதம் அதிகம். கடந்த மாதத்துடன் சேர்த்து தொடர்ந்து 12 மாதங்களாக ஜிஎஸ்டி ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.  

கடந்த ஜனவரியில் ரூ.1.57 லட்சம் கோடி வசூலானது. நடப்பு நிதியாண்டில் அதிகபட்ச வசூலாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது.  கடந்த மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ.1,49,577 கோடியில், மத்திய ஜிஎஸ்டி ரூ.27,662 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.75,069 கோடி அடங்கும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இறக்குமதி பொருட்கள் மூலம் ரூ.35,689 கோடி வசூலாகியுள்ளது. செஸ் வரியாக ரூ.11,931 கோடி வசூலானது.   

Related Stories: