வெளிநாட்டு நிதி பெற டெல்லி அமைப்புக்கு தடை

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதை ஒழுங்குபடுத்த வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டம் (எப்சிஆர்ஏ) 2010 அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ெடல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கொள்கை ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பு வெளிநாட்டு நிதி பெற தடை வித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த அமைப்பின் எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கொள்கை ஆராய்ச்சி மையம் மற்றும் ஆக்ஸ்பேம் இந்தியா அறக்கட்டளை அமைப்புகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் விதி மீறலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: