பெண் குழந்தைக்கு தாயான ஏஞ்சலிக் கெர்பர்

பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர். 35 வயதான முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான இவர், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இவர் பிராங்கோ பியான்கோ என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதால் யுஎஸ் ஓபன்தொடரில் இருந்து விலகுவதாக கெர்பர் அறிவித்தார்.

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கெர்பருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு லியானா என பெயர் வைத்துள்ளனர். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  லியானா,வை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம், 25.2.2023ல் நீங்கள் எங்களுடன் இருப்பது நாங்கள் கற்பனை செய்திருக்க முடியாத மிக அழகான மற்றும் மிகப்பெரிய உணர்வு. என தெரிவித்துள்ளார்.

அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஏஞ்சலிக் கெர்பர் அடுத்த ஆண்டு மீண்டும் டென்னிஸுக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். எனக்கு எந்த நேரம் அல்லது எந்த போட்டி என்று தெரியவில்லை, ஏனென்றால் நான் உண்மையில் நேரத்தை எடுக்க விரும்புகிறேன். நான் திரும்பி வரும்போது, 100 சதவீதம் உடற்தகுதியுடன் திரும்பி வர விரும்புகிறேன், மீண்டும் பொருத்தமாகவும் நன்றாகவும் உணர விரும்புகிறேன். இதுதான் திட்டம்என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: