புதுடெல்லி: உலக அரங்கில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜ பதிலளித்துள்ளது. சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பேசும்போது, பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பேரழிவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று பேசுகையில், ‘‘பாஜ கட்சி செயற்கையான தேசியவாதத்தில் ஈடுபடுவதற்காக இளைஞர்களை நிர்பந்திக்கிறது.இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தின் போது காஷ்மீர் சென்ற போது அங்குள்ள இளைஞர்கள் தங்கள் விருப்பப்படியே தேசிய கொடியை ஏற்றினர்’’ என்றார்.
