ஓராண்டுக்கு முன்பாகவே இந்திய வான்பகுதியில் பறந்த ராட்சத பலூன்: அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவின் அணுசக்தி மையங்களை கண்காணிக்கும் விதமாக வானில் பறந்த சீனாவின் உளவு பலூனை அமெரிக்க ராணுவ போர் விமானம் சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது. இதுபோன்று பலூன் மூலம் சீனா பல நாடுகளை உளவு பார்ப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இந்நிலையில், இந்திய வான் பகுதியில் கடந்த ஆண்டே மர்ம பலூன் பறந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்தமான் நிகோபர் தீவுக்கூட்டங்களின் வான் பரப்பில் இத்தகைய பலூன் கடந்த ஆண்டு தென் பட்டுள்ளது.

இந்த பலூன் பற்றி அப்போது சரியான தகவல் தெரியவில்லை. இது குறித்து முடிவெடுப்பதற்குள் அவை இந்திய வான் பரப்பை கடந்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த பலூன் ஒடிசாவின் அப்துல்கலாம் தீவு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா போன்ற ஏவுகணை பரிசோதிக்கும் தளங்களை கண்காணித்து ரேடார் கண்ணில் படாமல் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்த விவகாரம் பற்றி தற்போது மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

Related Stories: