எம்எல்ஏவாக்கினால் அதிமுக வேட்பாளர் சட்டசபையில் தூங்குவார்: சீமான் கிண்டல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மேனகாவுக்கு ஆதரவாக நேற்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகையில்,  நம் கட்சியின் பிரசாரத்திற்கு எவ்வளவு இடையூறு செய்தாலும் போலீசார் நமக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதற்கு நன்றி. இடைத்தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் நமக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள். அதிமுக வேட்பாளர் தென்னரசை சட்டசபைக்கு அனுப்பினால் அங்கு பாய், தலையணையுடன் சென்று தூங்கிவிடுவார். இப்படிப்பட்ட ஆட்களை தேர்வு செய்யாதீர்கள். தென்னரசை ஆட்டத்தில் இருந்து விலக்குங்கள் என்றார்.

* அதிமுக நாதகவினர் மீது வழக்கு

ஈரோடு மரப்பாலம் பகுதியில் கடந்த 24ம் தேதி நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு முறையாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. இது குறித்து பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல கடந்த 24ம் தேதி பி.பெ. அக்ரஹாரம், பெரிய பள்ளிவாசல் முன் எவ்வித அனுமதியும் இன்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக அதிமுக மற்றும் நாதகவினர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: