தூத்துக்குடியில் இருந்து வந்து பாம்பன் பாலத்தை கடந்த சரக்கு கப்பல்: கொல்கத்தா நோக்கி சென்றது

ராமேஸ்வரம்: தூத்துக்குடியில் இருந்து பாம்பன் கடல் பகுதிக்கு வந்த சரக்கு கப்பல் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தை கடந்து கொல்கத்தா துறைமுகம் நோக்கி சென்றது. தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் இருந்து புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று மன்னார் வளைகுடா கடல் வழியாக பாம்பன் கடல் பகுதிக்கு வந்தது. ேமற்கு வங்க மாநிலம் ெகால்கத்தாவில் உள்ள துறைமுகம் செல்வதற்காக வந்த சரக்கு கப்பலுக்காக நேற்று மாலை 4 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தின் ஷெர்ஜர் தூக்கு பாலம் திறக்கப்பட்டது. பின் அந்த சரக்கு கப்பல் ரயில் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி வழியாக கொல்கத்தா துறைமுகம் நோக்கி சென்றது.

இதற்கிடையே மண்டபம் தெற்கு ஜெட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடலோரக்காவல் படைக்கு சொந்தமான இரண்டு ரோந்து கப்பல்களும், ஒன்றன் பின் ஒன்றாக பாம்பன் பாலத்தை கடந்து பாக் ஜலசந்தி கடல் வழியாக மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள கடலோர காவல்படை முகாமிற்கு சென்றது. ரயில்வே பாலத்தின் வழியாக சரக்கு மற்றும் கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் சென்றதை, பாம்பன் சாலைப்பாலத்தில் நின்றிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Related Stories: