ஐதராபாத்: உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றினார். 60 கிலோவாக இருந்தவர், அந்த படத்துக்காக 90 கிலோவுக்கு மாறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. 10 கிலோ வரைதான் அவரால் எடையை குறைக்க முடிந்தது. இதனால் பழைய 60 கிலோ எடைக்கு அவரால் வரமுடியவில்லை. இதனால் பல பட வாய்ப்புகளை அனுஷ்கா இழந்தார். நயன்தாரா தமிழில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, அனுஷ்காவுக்கு தமிழில் ஒரு படம் கூட கிடைக்கவில்லை.