உம்மன் சாண்டி உடல்நிலையில் முன்னேற்றம்

பெங்களூரு: பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேரள மாஜி முதல்வர் உம்மன் சாண்டி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால் பெங்களூருவில் உள்ள எச்சிஜி மருத்துவமனைக்கு கேரளாவில் இருந்து விமானம் மூலம் அவர் அழைத்து வரப்பட்டார். பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உம்மன் சாண்டியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது.

Related Stories: