தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள்: அமித்ஷா

டெல்லி: தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுங்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். உலகின் மூத்த மொழிகளில் ஒன்று செம்மொழியான தமிழ் மொழி. இது போன்ற பழமைமிக்க மொழிகள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் மொழிகளுக்காக ஆண்டுதோறும் சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் சர்வதேச தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

பன்மொழி கலாச்சாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த நாளில் நமது தாய் மொழியுடன் இணைவோம் மற்றும் தாய்மொழியை மேலும் வளர்ப்போம் என உறுதிமொழி எடுங்கள். நமது தாய்மொழியை அதிகம் பயன்படுத்துவோம் என நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். குழந்தைகள் தாய்மொழியில் எழுதி, பேசி, யோசிக்கும்போது அவர்களின் யோசனை திறன், ஆராய்வு, பகுப்பாய்வு திறன் அதிகரிக்கும் என கூறினார்.

Related Stories: