சீர்காழி அருகே இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி: நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

மயிலாடுதுறை: சீர்காழி அருகே இலவச வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக மோசடி செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி செண்பகசாமி கைது செய்யப்பட்டார். நாம் தமிழர் கட்சி நிர்வாகி செண்பகசாமியை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட செண்பகசாமி நாம் தமிழர் கட்சியின் ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளராக உள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

2006 சுனாமியால் பாதித்தவர்கள் வீட்டுமனை பெற்ற நிலையில் எஞ்சியவர்களுக்கு இலவச மனை வாங்கி தருவதாக கூறி 30க்கும் மேற்பட்டோரிடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகி செண்பகசாமி உள்பட இருவர் பணம் பெற்று ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழையார் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி 40 பேரிடம் ரூ.8 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா வாங்கி தராமல் ஏமாற்றியதால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

மீனவர்கள் போராட்டத்தை அடுத்து போலியாக பட்டா தயாரித்து கொடுத்தாததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி செண்பகசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே செண்பகசாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில் போலியாக பட்டா தயாரித்த புகாரில் செண்பகசாமியை போலீஸ் கைது செய்தது.

Related Stories: