திருப்பதி கோயிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மார்ச் 1 முதல் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி கோயிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மார்ச் 1 முதல் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் படுத்தப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் மார்ச் 1 முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தனிநபர் அதிக லட்டுகள் பெறுவதை தவிர்த்தல், இலவச தரிசன அறை ஒதுக்கீட்டில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை, நிஜபாத தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் உள்ளன. கொரோனா காரணமாக அந்த சேவைகளில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏகாந்தமாக நடைபெற்ற அந்த சேவைகளை மக்கள் ஆன்லைனில் தரிசனம் செய்தனர். இந்நிலையில் திருப்பதி கோயிலில் பக்தர்கள் ஏமாற்றப்படுவதை தவிர்க்க மார்ச் 1 முதல் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் படுத்தப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

Related Stories: