மதுபான கொள்கை முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஆஜராக அவகாசம்: சிசோடியா கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, துணை முதல்வரும், நிதி அமைச்சருமான மணீஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தியது. ஆனால், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிசோடியா பெயர் இடம் பெறவில்லை.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 3 மாதங்கள் ஆன நிலையில், சிசோடியா நேற்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது டெல்லி மாநில பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடப்பதால்,  ஒருவார காலம் அவகாசம் வழங்கும்படி சிசோடியா சிபிஐக்கு கடிதம் உள்ளார். அவரது இந்த கோரிக்கையை சிபிஐ ஏற்றுக் கொண்டுள்ளது.

Related Stories: