டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 3 நாள் சோதனை நிறைவு

புதுடெல்லி: டெல்லி,  மும்பையில் உள்ள பிபிசி அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக நடந்த வருமான  வரித்துறை சோதனை  முடிவுக்கு வந்ததாக  அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களில்  பிரதமர் மோடியின்  பங்கு  தொடர்பான ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களை  இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு  செயல்படும் பிபிசி நிறுவனம் வெளியிட்டது.  

 இந்த நிலையில் கடந்த  செவ்வாய்க் கிழமையன்று காலை 11 மணியளவில்  வருமான வரித் துறையைச் சேர்ந்த  அதிகாரிகள் குழு, டெல்லி மற்றும்  மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன  அலுவலகத்தில் திடீர் சோதனையை  மேற்கொண்டனர். கடந்த  மூன்று நாட்களாக நடந்த வருமான வரித்துறையின் சோதனை   நிறைவு பெற்றதாக  அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில்,  ‘பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையின்  சோதனைகள்  நிறைவு பெற்றது.

கிட்டத்தட்ட 59 மணி நேர சோதனைகள்  நடந்தன. மூன்று நாட்களில் நடந்த இந்த ஆய்வின் போது, பல்வேறு ஆவணங்கள்  மற்றும் தரவுகளை வருமான வரித்துறை சேகரித்துள்ளது. அதன்தொடர்ச்சியாக மேல்  நடவடிக்கை இருக்கும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே  பிபிசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வரி செலுத்துபவர்கள் தற்போது  அலுவலகங்களில் பணியாற்றவில்லை. சோதனைக்கு பிறகு தற்ேபாது இயல்பு நிலை  திரும்பியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: