கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட சேனை ஓடை பாலத்தை சீரமைக்க கோரிக்கை

கம்பம்: கம்பம் நகராட்சி உட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கம்பம் நகராட்சி நிறைவேற்றி வருகிறது. இந்த வார்டுக்கு உட்பட்ட சேனை ஓடை பாலம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலத்தின் மேல் பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மட்டுமல்லாது புது பள்ளிவாசல், வடக்கு வட்டம், கம்பமெட்டு ரோடு ஆகிய பகுதிகளை இணைக்கும் சாலையாக இந்த பாலம் அமைந்துள்ளது.

பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படும் அத்தியாவசிய பாதையாக உள்ள இந்த சேனை ஓடை பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதை கம்பம் நகராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘கம்பத்தில் உள்ள பாலங்களில் மிகவும் பழமை வாய்ந்த பாலமாக இந்த சேனை ஓடை பாலம் உள்ளது.

இந்த பாலம் வழியாக நாளொன்றுக்கு ஏராளமானவர்கள் நடந்து செல்கின்றனர்.தற்போது இந்த பாலம் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர்கள் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. கனராக வாகனங்கள் சென்றால் இடிந்து விழும் சூழலும் உள்ளது.எனவே பாலத்தினை சரி செய்து தர வேண்டும் அல்லது புதிய பாலம் கட்டித் தர வேண்டும்’’ என்றனர்.

Related Stories: