கூடுவாஞ்சேரியில் தற்காலிகமாக செயல்பட உள்ள வண்டலூர் தாலுகா நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில் தற்காலிகமாக வண்டலூர் தாலுகா நீதிமன்றம் செயல்பட இருக்கும் கட்டிடத்தை  மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு  செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவில், கூடுவாஞ்சேரி, வண்டலூர் மற்றும் மாம்பாக்கம் ஆகிய குரு வட்டங்களும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியும் உள்ளன. இந்த நிலையில் வண்டலூர் தாலுகாவில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அதுவரை வண்டலூர் தாலுகா நீதிமன்றம்  தற்காலிக கட்டிடத்தில் செயல்பட நந்திவரம்-கூடுவாஞ்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்  அறிஞர் அண்ணா சமுதாய நலக்கூடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன், வண்டலூர் தாசில்தார் பாலாஜி, நகர மன்ற துணை தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: