தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் கண்காட்சியில் பாரம்பரிய கலை வடிவங்களை தக்க வைக்க வேண்டும்-செயல் அதிகாரி தொடங்கி வைத்து பேச்சு

திருமலை : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் கண்காட்சியில் பாரம்பரிய கலை வடிவங்களை தக்க வைக்க வேண்டும் என்று செயல் அதிகாரி தர்மா தொடங்கி வைத்து பேசினார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூலம்  நிர்வகித்து வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சிற்ப கலைக்கல்லூரியில்  மூன்று நாள் விற்பனையுடன் கூடிய கண்காட்சியை செயல் அதிகாரி தர்மா தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

3 நாள் கண்காட்சி மாணவர்கள் மத்தியில் சிற்பக்கலையில் புதிய வாய்ப்புகளை ஆராய்வதோடு பாரம்பரிய கலைப் படிப்புகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்களை ஊக்குவிக்கிறது. வருங்கால சந்ததியினருக்கு பாரம்பரிய கலை வடிவங்களை தக்க வைக்க வேண்டும். உன்னத நோக்கத்துடன் தேவஸ்தானம் தொடர்ந்து கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் இதுபோன்ற கலைகளுக்கு பெரிய அளவில் ஊக்கம் அளிக்கிறது.

இதில் பயின்ற  பல மாணவர்கள் இப்போது உலகம் முழுவதும் புகழ்பெற்ற சிற்பிகள், விரிவுரையாளர்கள் மற்றும் கலைஞர்களாக குடியேறியுள்ளனர்.  கலம்காரி ஓவியப் படிப்பில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் தேவஸ்தானம் ₹1  லட்சம் டெபாசிட் செய்கிறது.  பிப்ரவரி 15 ஆம் தேதி வரை ஸ்டால்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்றார்.

தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் மாணவர்களை வடிவமைத்த நுண்கலை நிறுவன ஆசிரியர்களை அவர் பாராட்டினார்.

காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மரம், சிமென்ட், உலோகம் மற்றும் கலம்காரி வேலைப்பாடுகள் உள்ளிட்ட ஸ்டால்களை ஜே.இ.ஓ  சதா பார்கவியுடன் சேர்ந்து பார்வையிட்டார். இதில் தேவஸ்தான கல்வி அலுவலர்  பாஸ்கர், எஸ்.வி.ஐ.டி.எஸ்.ஏ முதல்வர்  வெங்கட்,  ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: