பசுவை கட்டிப்பிடிக்கும் போது மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு தருவது யார்?: மம்தா கேள்வி

கொல்கத்தா:  உலகம் முழுவதும் இன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதற்கு பதில் பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்துவோம் என்று ஒன்றிய கால்நடை பராமரிப்பு துறை அறிவித்தது. கடும்விமர்சனங்கள் வந்ததால் அந்த கோரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது: இன்று பசுக்களை கட்டிப்பிடிக்க சொல்கிறார்களே, மாடு எட்டி உதைத்து விட்டால் அதற்கு பாஜ  அரசு இழப்பீடு வழங்குமா?. பசுவை கட்டிப்பிடிக்கும் போது எட்டி உதைத்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலில் அவர்கள் அறிவிக்க வேண்டும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அராஜக அரசை முடிவுக்கு கொண்டுவந்து மக்கள் அரசை நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: