திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. வருகிற 17ம் தேதி வரை நடை திறந்திருக்கும். மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் (ஜனவரி) 20ம் தேதி சாத்தப்பட்டது. இந்த காலத்தில் கோயில் மொத்த வருமானம் ரூ.360 கோடியை தாண்யது. இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று (12ம் தேதி) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறப்பார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கும். 17ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.