தானா சேர்ந்த கூட்டம் அல்ல... தலைக்கு ரூ.500: சிறுமியிடம் சில்மிஷம்; தொண்டருக்கு தர்மஅடி

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் ஈரோடு வேப்பம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. தொகுதியில் இருந்து ஆட்கள் குறைந்த அளவே சென்றதால் வெளியூர்களில் இருந்து அதிமுகவினரை வாகனங்களில் அழைத்து வந்து கூட்டத்தை கூட்டினர். பொதுக்கூட்ட நுழைவாயில் பகுதியில் கூட்ட நெரிசல் இருந்தது. இதை பயன்படுத்தி அதிமுக தொண்டர் ஒருவர் அங்கு வந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பெண்கள் அந்த நபரை பிடித்து தாக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்த பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கூட்டத்திற்கு செல்லாமல் திரும்பி சென்றுவிட்டனர்.

Related Stories: