22% ஈரப்பத நெல் கொள்முதல் குறித்து டெல்டா மாவட்டங்களில் ஒன்றிய அரசின் குழு இன்று ஆய்வு

தஞ்சாவூர்: தமிழ் நாட்டில் 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் குறித்து ஒன்றிய அரசு அமைத்துள்ள குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் சம்பா பயிர்கள் நீரில் முழ்கி பாதிக்கப்பட்டன. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராகி இருந்த சுமார் 1 லட்சம் எக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியதாக முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரதமருக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி இருந்த கடிதத்தில் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். மேலும் நெல் கொள்முதல் விதிகளில் தேவையான தளர்வுகளை வழங்கவும் அக்கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையாயி ஏற்று மூன்று பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. அக்குழு தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் பாதிக்கபட்ட இடங்களில் இன்று ஆய்வு மேற்கொள்கிறது. அக்குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் 22 சதவீத ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: