கில் தொடக்க வீரராக இருக்க வேண்டும்: ஹர்பஜன்சிங் பேட்டி

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்துள்ள பேட்டி: ``என்னை பொருத்தவரையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில் இருக்க வேண்டும். கில் பேட்டிங் பார்ம் வேற லெவலில் இருக்கிறது. கேஎல்.ராகுல் மிகச் சிறந்த வீரராக இருந்தாலும் கடந்த ஆண்டில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவரது புள்ளி விவரங்கள் சரியாக இல்லை.

ஆனால் கில் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல வேண்டும் என்றால் ஒரு ஆட்டத்தில் மட்டுமல்லாது இந்த தொடர் முழுவதும் கில் துவக்க ஆட்டக்காரராக இடம்பெற வேண்டும்.  அவர் அவருடைய பார்மில் தன்னம்பிக்கை உடன் விளையாடினால் இந்தியாவுக்காக இந்த தொடரில் நிறைய ரன்கள் எடுப்பார். அதனால் அவர் விளையாடுவார் என்று நான் நினைக்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: