கொல்கத்தா வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஈடன் கார்டனில், மழை காரணமாக தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில் (தலா 16 ஓவர்), டாஸ் வென்ற மும்பை பந்துவீசியது. கேகேஆர் 16 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் குவித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 42 ரன் (21 பந்து,6 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் ராணா 33 ரன் விளாசினர். மும்பை பந்துவீச்சில் பும்ரா2 விக்கெட், சாவ்லா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மும்பை 16 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து, 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதிகபட்சமாக இஷான் கிஷன்40 ரன் (22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 32 ரன் எடுத்தனர். கொல்கத்தா 12 போட்டியில் 9வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

The post கொல்கத்தா வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: