சில்லி பாயின்ட்…

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையே ஈடன் கார்டனில் நேற்று இரவு 7.30க்கு தொடங்க இருந்த 60வது லீக் ஆட்டம், கன மழை காரணமாக டாஸ் கூட போட முடியாமல் தாமதமானது.

* நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்து அணியில் இருந்து விலகுவதை உறுதி செய்துள்ளார். அவர் அடுத்து ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* 2011 ஐபிஎல் சீசனில் இடம் பெற்ற கேரளா டஸ்கர்ஸ் அணிக்காக விளையாடிய வீரர்களுக்கு சேர வேண்டிய ஊதியம் இது வரை வழங்கப்படவில்லை என்று இந்திய அணி முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சாந்தகுமாரன் சாந்த் தெரிவித்துள்ளார். டஸ்கர்ஸ் அணியில் சாந்த், ஜடேஜா, மெக்கல்லம், ஜெயவர்தனே உள்பட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். ஒப்பந்த விதிகளை மீறியதற்காக அந்த அணி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் ஹூபர்ட் ஹர்காக்சுடன் நேற்று மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் 1-6, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

* இங்கிலாந்து வேகம் ஜேம்ஸ் ஆண்டர்சன் (41 வயது), ஜூலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் இதுவரை 197 டெஸ்டில் 700 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

* தோஹாவில் நடந்த டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்திய நட்சத்திரம் நீரஜ் சோப்ரா நூலிழையில் 2வது இடம் பிடித்து (88.36 மீ.) வெள்ளிப் பதக்கம் வென்றார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: