இமயமலைப்பகுதியில் காணப்படும் மரம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்கள்

குன்னூர் : இமயமலைப்பகுதியில் காணப்படும் ரோடோடென்ட்ரான் ஹார்பேரியம் மரம் குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளது. இங்குள்ள ஒரே ஒரு மரத்தில் பூக்ககள் மலர்ந்து கண்களுக்கு விருந்தளிக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவை  உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்து நடப்பட்டவை. குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் மட்டும் காணப்படும் ருத்ராட்சை மரங்கள் மற்றும் குரங்குகள் ஏறா மரங்கள் என பல்வேறு மரங்கள் உள்ளன.

 மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 2500 அடி உயரத்தில் அடர்ந்த சோலைக் காடுகளில் மட்டும் காணப்படும் ரோடோ டென்ட்ரான் ஹார்பேரியம் வகையான மலர்கள் தற்போது பூக்கத்துவங்கியுள்ளன.  

இமயமலை பகுதிகளில் மட்டுமே காணப்படும் இவ்வகையான மரங்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ளது. மேலும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரே ஒரு மரம் மட்டுமே உள்ளது. அதுவும் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் மட்டுமே உள்ளது. இவ்வகை மரங்களில் குளிர் காலத்தில் மட்டுமே மலர்கள் மலருகின்றன. தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ரோடோடென்ட்ரான் ஹார்பேரியம் மலர்கள் மலர்ந்துள்ளன. மேலும் பூங்காவிற்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Related Stories: