இந்தியாவுக்கு விரைவில் எஸ்-400 ஏவுகணைகள்: ரஷ்ய தூதர் அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கு விரைவில் எஸ் 400 ஏவுகணை முழுவதுமாக சப்ளை செய்யப்படும் என்று ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தார். இந்தியா, ரஷ்யா இடையே கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஒப்பந்தத்தில் ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் 5 எண்ணிக்கையை வாங்க  கையெழுத்திடப்பட்டது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இதையும் மீறி ஒப்பந்தம் செய்தால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. அதன்பின் இந்த ஒப்பந்தம் குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லை. தற்போது இந்தியா வந்த ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர் இந்தியா உறவு குறித்தும் தெளிவுபடுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:

இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தத்தில் உறுதியாக உள்ளதால், இந்தியாவுக்கு எஸ்-400 வான்பாதுகாப்பு ஏவுகணை விரைவில் வழங்கப்படும். இரு தரப்பினரும் முழு ஒப்பந்தத்தையும் முடிக்க உறுதிபூண்டுள்ளோம். யாரும் அதை தடுக்க முடியாது. ஏற்கனவே எஸ் 400 வகையில் இரண்டு வகை ஏவுகணைகள் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்டு விட்டன. மீதம் உள்ளவை விரைவில் சப்ளை செய்யப்படும். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா  ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டால், எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் மாஸ்கோ தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: