சிறப்பான சேவைகள் மூலம் காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும்

*அனந்தபூர் சரக டிஐஜி பேச்சு

திருப்பதி : திருப்பதியில் நடைபெற்ற ஆயுதப்படை கண்காட்சியில் சிறப்பான சேவைகள் மூலம் காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று அனந்தபூர் சரக டிஐஜி ரவிபிரகாஷ் தெரிவித்துள்ளார். திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல்துறை பயிற்சி மைதானத்தில் ஆயுதப்படை கண்காட்சி நேற்று நடைபெற்றது. அனந்தபூர் சரக டிஐஜி ரவிபிரகாஷ் தலைமை தாங்கினார். எஸ்பி பரமேஸ்வர் முன்னிலை வகித்தார். இதில் ஆயுதப்படை போலீசார் அவசர காலத்தில் காவல்துறை பயன்படுத்திய  பல்வேறு ஆயுதங்கள்  மற்றும் கும்பல் ஆபரேஷன் டிரில் மற்றும் பணய கைதிகளை  விடுவிக்கும் ஆபரேஷன் போன்ற பயிற்சியை சிறப்பு குழுவினர் சாகசங்களை செய்தனர். தொடர்ந்து நடந்த அணிவகுப்பு மரியாதையை அவர்கள் ஏற்று கொண்டனர்.

தொடர்ந்து, அனந்தபூர் சரக டிஐஜி ரவிபிரகாஷ் பேசியதாவது:

சிறப்பான சேவைகள் மூலம் காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும். திருப்பதி மாவட்டத்தில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெறும். இங்கு விஐபிக்கள் வந்து செல்கின்றனர். மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மக்களிடையே அமைதியான சூழலை அமைக்க வேண்டும். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தி பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

திருப்பதி மாவட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட கூடூரு சப்-டிவிஷன், ஹரிகோட்டா மற்றும் சத்யவேடு தொழிற்பேட்டைகள் மிக முக்கியமான பகுதிகள். மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிட்ட முறையில் கடமையை நிறைவேற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

மக்களை காக்க வேண்டிய காவல்துறை செய்யும் எந்த சிறு தவறும் மக்களுக்கு எதிராக திரும்புவது மட்டுமின்றி காவல் துறைக்கே கெட்ட பெயரையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து போலீசார் விலகி இருக்க வேண்டும். காவல்துறை சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சீருடை அணிந்த சேவையாக இருப்பதால் காவல்துறையின் எந்த தவறும் சமூகத்தில் மிக விரைவாக பரவும்.  

இவ்வாறு, அவர் பேசினார்.  முடிவில், சிறப்பாக செயல்பட்ட  காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில் கூடுதல் எஸ்பிக்கள் வெங்கடராவ், குலசேகர், மதி, விமலாகுமாரி மற்றும் ஆயுதப்படை வீரர்கள் பங்கேற்றனர்.

Related Stories: