விவசாயிகள் ஆளும் காலம் வந்து விட்டது: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேச்சு

நான்டெட்: விவசாயிகள் நாட்டை ஆட்சி செய்யும் நேரம் வந்து விட்டது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தேசிய அரசியலில் கால் பதிக்கும் நோக்கத்துடன், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தன் கட்சியின் பெயரை அண்மையில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி என்று கே.சந்திரசேகர ராவ் மாற்றினார்.  இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.

இதில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ இனி வரும் ஆட்சி விவசாயிகளுக்கான ஆட்சி என்று முழங்குகிறது. நாட்டில 40 சதவீதத்துக்கு மேல் விவசாயிகளும், 50 சதவீதத்துக்கு மேல் விவசாய தொழிலாளர்களும் இருக்கிறார்கள். ஒரு அரசாங்கத்தை அமைக்க இந்த எண்ணிக்கை போதும். விவசாயிகளும் சட்டங்களை எழுதவும், உருவாக்கவும் முடியும். விவசாயிகள் நாட்டை ஆட்சி செய்யும் நேரம் வந்து விட்டது.

Related Stories: