மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்: அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 நாட்களாக பெய்த மழை காரணமாக 30ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 1 லட்சத்து எண்பதாயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தன. இதே போல் 30 ஆயிரம் ஏக்கரில் உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகளையும் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் மூன்று நாட்களாக பெய்த மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். சம்பா பயிர்கள் மட்டுமல்லாது இருபதாயிரம் ஏக்கர் உளுந்து, பயத்தம் பருப்பு உள்ளிட்ட பயிர்களும் மழையில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே தங்களால் பாதிப்பிலிருந்து மீள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: