சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க ஹாங்காங் முடிவு

சீனா: கொரானாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக ஹாங்காங் அறிவித்திருக்கிறது. ஹாங்காங்யில் இயற்கை எழிலுடன் கண்ணை கவரும் சுற்றுலா தளங்களை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் மக்கள் வந்து செல்வது வழக்கம் ஆனால் கொரோனா பரவலுக்கு பிறகு ஹாங்காங் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. தற்போது உலக நாடுகள் பயணகட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதால் சுற்றுலா துறையை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி இருக்கும் ஹாங்காங்கில் சுற்றுலா வணிகத்தை பெருக்க புதிதாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கவுள்ளதாக ஹாங்காங் அறிவித்திருக்கிறது. இந்த டிக்கெட்டுகள் காத்திக் பசுபிக் ஏர்வேஸ், ஹாங்காங் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானங்கள் வாயிலாக வருகிற மார்ச் மாதம் முதல் படிப்படியாக வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே பிப்ரவரி 6ம் தேதி முதல் ஹாங்காங் உடனான எல்லைகளை திறப்பதாக சீனா அறிவித்திருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் உள்பட எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிகள் சீனா வரலாம் என்று அறிவிக்க பட்டுள்ளதால் இலவச விமான டிக்கெட் பெரும் பலர் சீனாவிற்கு செல்ல கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Related Stories: