தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உழைப்பதே ஒன்றிய அரசின் முன்னுரிமை: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் நலனே ஒன்றிய அரசின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது: 2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  

கடந்த 8 ஆண்டுகளில் பாரம்பரிய கைத்தறி துண்டுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கைத்தறி துண்டுக்குப் பின்னாலும் அசாம் பெண்களின் கடின உழைப்பு இருக்கிறது. சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உழைப்பதற்கு ஒன்றிய அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: