இந்த ஆண்டு 1,75,025 பேர் ஹஜ் பயணத்திற்கு அனுமதி

புதுடெல்லி: இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு  1,75,025 பேர் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமான கேள்விக்கு சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: சவுதி அரசுடன் உள்ள ஒப்பந்தம் அடிப்படையில் இந்த ஆண்டு ஹஜ் நிர்வாக குழுவுடன் இணைந்து ஆலோசனை நடத்தி கொரோனாவுக்கு முந்தைய நிலைப்படி மீண்டும் 1,75,025 பேர் ஹஜ் செல்ல அனுமதி அளிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூடுதல் எண்ணிக்கையில் இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: