அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சவாளி நிக்கி ஹாலே போட்டி?

வாஷிங்டன்:  அமெரிக்காவில் குடியரசு கட்சியை சேர்ந்தவரும், 2 முறை தெற்கு கரோலினாவின் கவர்னர்  மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக இருந்த நிக்கி ஹாலே வருகின்ற 15ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பினார்.

இந்த அழைப்பிதழில் 15ம் தேதி சிறப்பு அறிவிப்பை வெளியிட இருக்கிறேன்.  இதில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நிக்கி ஹாலே அடுத்து ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

Related Stories: