ஓடிக் கொண்டிருந்த காரில் திடீர் தீ கர்ப்பிணி மனைவியுடன் கணவர் பலி: செக்கப்புக்கு சென்றபோது பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் இன்று காலை ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் கர்ப்பிணி மனைவியுடன் அவரது கணவரும் தீயில் கருகி பலியானார். கேரள மாநிலம் கண்ணூர் அருகே மையில் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (32). அவரது மனைவி ரீஷா (26). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்தநிலையில் ரீஷா மீண்டும் கர்ப்பமானார். அதன்படி இன்று கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக பிரஜித் காரில் அழைத்து சென்றார். அவர்களுடன் மூத்த குழந்தை உள்பட மேலும் 4 பேர் காரில் இருந்தனர். காரை பிரஜித் ஓட்டிச் சென்றார். அவருக்கு அருகே முன் இருக்கையில் ரீஷா அமர்ந்து இருந்தார். கண்ணூர் அரசு மருத்துவமனை அருகே சிட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டு இருருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக காரின் முன்புறம் தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதனால்

அதிர்ச்சி அடைந்த பிரஜித் காரை உடனே நிறுத்தினார்.

சுதாரித்துக் கொண்டு பின் இருக்கையில் இருந்த குழந்தை உள்பட 4 பேரும் காரில் இருந்து வெளியே குதித்து தப்பினர். ஆனால் பிரதீப், அவரது மனைவி ரீஷா ஆகியோரால் உடனே காரில் இருந்து இறங்க முடியவில்லை. ஒரு சில வினாடிகளுக்குள் கார் முழுவதுமாக தீப்பிடித்ததால் 2 பேரும் காருக்குள்ளேயே தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த தகவல் அறிந்ததும் சிட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி காயமடைந்த 4 பேரையும் மீட்டு கண்ணூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் பலியான பிரஜித், ரீஷா ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: