டிவிட்டரில் நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாச பதிவு ராணிப்பேட்டை மாஜி பாஜ மாவட்ட நிர்வாகி மீது வழக்கு: கைது செய்ய சென்னை சைபர் க்ரைம் போலீஸ் தீவிரம்

சென்னை: டிவிட்டரில், நடிகை காயத்ரி ரகுராம் குறித்து ஆபாசமாக பதிவு செய்ததாக அளித்த புகாரின் படி, சென்னை சைபர் க்ரைம் போலீசார், ராணிப்பேட்டை பாஜ, முன்னாள் மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜ மாநில கலாச்சார பிரிவின் தலைவராக இருந்தவர் காயத்ரி ரகுராம். இவருக்கும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே யார் கட்சியில் மூத்தவர்கள் என்பதில் போட்டி நிலவி வந்தது. இந்த போட்டி பிற்காலத்தில் மோதலாக மாறியது. அதைதொடர்ந்து காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்தார்.

பிறகு, நடிகை காயத்ரி ரகுராம், பாஜ தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பல வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே ராணிப்பேட்டையை சேர்ந்த பாஜ மாவட்ட தலைவர் பாபு என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை காயத்ரி ரகுராமை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்து இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காயத்ரி ரகுராம், உடனே ஆன்லைன் மூலம் தன்னை பற்றி தவறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்து பதிவு ெசய்த ராணிப்பேட்டையை சேர்ந்த பாஜ மாவட்ட தலைவர் பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் க்ரைமில் கடந்த வாரம் புகார் அளித்து இருந்தார்.

இதற்கிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பெண்ணை தவறாக சித்தரித்த ராணிப்பேட்டையை சேர்ந்த பாஜ மாவட்ட தலைவர் பாபுவை கட்சியில் இருந்து மாநில பாஜ தலைமை நீக்கியது. நடிகை காயத்ரி ரகுராம், ஆன்லைன் மூலம் அளித்த புகாரின் படி, சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நடிகையை ராணிப்பேட்டையை சேர்ந்த பாபு தவறாக சித்தரித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தது உறுதியானது. அதை தொடர்ந்து ராணிப்பேட்டையை சேர்ந்த முன்னாள் பாஜ மாநில தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: