விமானத்தில் கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த ஒரு பெண் பயணியின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் தங்க வளையல்கள், தங்க செயின்கள் மற்றும் தங்கப்பசை அடங்கிய பார்சல் இருந்தது. இதேபோல், துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணியின் உள்ளாடைக்குள் தங்கப்பசை பார்சலை பறிமுதல் செய்தனர். மேலும், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து, லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஒரு ஆண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலில் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது.

அதுபோல, சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு ஆண் பயணி கால்களில் அணிந்திருந்த ஷூ, சாக்ஸ்களில் தங்கப்பசை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து 4 விமானங்களில் வந்த ஒரு பெண் பயணி உள்பட 4 பயணிகளிடம் இருந்து, ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்புடைய 2.2 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: