மன்மோகன் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

லண்டன்: இங்கிலாந்தில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் சிறந்த பங்களிப்புக்காக இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த சாதனையாளர்கள், தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள். இந்நிலையில், இந்தாண்டுக்கான இந்தியா-இங்கிலாந்து வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வாரம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விருதினை முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்திற்கு சென்று அவரிடம் நேரடியாக வழங்கி கவுரவித்தனர். இந்தியா-இங்கிலாந்து உறவை வலுப்படுத்தும், நமது நாட்டின் எதிர்காலமாகிய இளைஞர்களின் கைகளில் இருந்து இந்த விருதை பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Related Stories: