10 ஆண்டாக சிகிச்சை பெற்று வருகிறார் ஒடிசா அமைச்சரை கொன்ற எஸ்.ஐ.க்கு மனநோய்: மருத்துவர் தகவல்

புவனேஸ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாசை சுட்டுக்கொன்ற உதவி எஸ்ஐ சுமார் 10 ஆண்டுகளாக மனநோய்க்கு சிகிச்சை பெற்றதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஜர்சுகுதா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாசை பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி எஸ்ஐ. கோபால் தாஸ் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக உதவி எஸ்ஐ கோபால் தாஸை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், அமைச்சர் நபா கிஷோரை கொல்ல வேண்டும் என்று உதவி எஸ்ஐ கோபால் தெளிவான நோக்கம் கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இதனிடையே கோபால் தாஸ் சுமார் 10 ஆண்டுகளாக மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: