குஜராத், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2 தலைமை நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்: கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் 6 உறுப்பினர்களும் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டலை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக முடிவு செய்தனர். அதே போல் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் பெயரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் முடிவு செய்தது. ஆனால் கொலிஜியத்தில் உள்ள நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி அரவிந்த் குமாரின் பெயரை பரிந்துரை செய்வதில் இடஒதுக்கீடு முறை இருப்பதாகவும், அவரது பெயரை பிற்காலத்தில் பரிசீலிக்கலாம் என்ற அடிப்படையில் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

Related Stories: