கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2500 பேர் பங்கேற்க உள்ளனர்: ராமேஸ்வர தேவாலய பங்கு தந்தை தகவல்

ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து 2500 பேர் பங்கேற்க உள்ளதாக ராமேஸ்வர தேவாலய பங்கு தந்தை தேவசகாயம் தெரிவித்துள்ளார். மார்ச் 3 மற்றும் 4-ம் தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5,000 பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பயணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக உள்ள தேவாலய பங்கு தந்தை தேவசகாயம் மற்றும் ராமேஸ்வரம் தங்கச்சி மடம் மீனவ சங்கத்தலைவர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பங்கு தந்தை தேவசகாயம் தமிழ்நாட்டில் இருந்து 60 படகுகளில் 2500 பேர் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவிற்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்றும் விண்ணப்பத்துடன் ஆதார் நகல், காவல்துறையின் தடையில்லா சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும் என்றும் பங்கு தந்தை தேவசகாயம் கூறினார்.

Related Stories: