ரஷ்ய குண்டு வீச்சில் 5 பேர் பலி

கீவ்:  உக்ரைனின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. நேற்று முன்தினம் நடத்தப்பட்ட  தாக்குதலில் பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கிய நிலையில் கார்கிவ் பிராந்தியத்தின் பெரும் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. எனினும் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய உக்ரைனின் பதில் தாக்குதலில் கார்கிவ் உள்ளிட்டவை ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

Related Stories: