மோடியை சந்தித்தார் ஐநா தலைவர் கொரோசி

புதுடெல்லி: ஐநா பொதுச்சபை தலைவர் சபா கொரோசி பதவி ஏற்ற பிறகு முதல் பயணமாக இந்தியா வந்துள்ளார். இங்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இருவரும் உலக அளவில் தற்போது உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ‘இந்தியாவிற்கு தனது முதல் வருகையை  மேற்கொண்டுள்ள சபா கொரோசியை வரவேற்பதில் மகிழ்ச்சி. ஐநா உட்பட பலதரப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. உலகளாவிய நீர் வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாங்கள் விவாதித்தோம். ஜி20 தலைமை பதவியில் இந்தியாவுக்கான அவரது ஆதரவை வரவேற்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டார். மோடியை சந்தித்த பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் கொரோசி சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய உலகளாவிய சவால்கள், ஐநா சீர்திருத்தம், உக்ரைன் மோதல்கள் மற்றும் ஜி 20 நிகழ்ச்சி நிரல் குறித்து இருவரும் விவாதித்தனர்.

Related Stories: