ஊபா சட்டத்தின் கீழ் ஹூரியத் ஆபிசுக்கு சீல் வைத்தது என்ஐஏ

ஸ்ரீநகர்: சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் (ஊபா) ஸ்ரீநகரில் உள்ள ஹூரியத் மாநாட்டு அமைப்பின் அலுவலகத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சீல் வைத்தது. காஷ்மீரில் 26 பிரிவினைவாத அமைப்புகள் இணைந்து கடந்த 1993ல் ஹூரியத் மாநாடு அமைப்பை உருவாக்கின.

இதில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் நயீம் கான் கடந்த 2017ல் தீவிரவாதத்திற்கு நிதி உதவி வழங்கிய வழக்கில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் நயீம் கானுக்கு சொந்தமான கட்டிடங்களை பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது.

இதன் அடிப்படையில், நயீம் கானுக்கு சொந்தமான, ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள ஹூரியத் மாநாட்டு அமைப்பின் அலுவலகத்திற்கு நேற்று சென்ற என்ஐஏ அதிகாரிகள் சீல் வைத்து, நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டினர். கடந்த 2019ல் பிரிவினைவாத அமைப்புகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், இந்த அலுவலகம் தற்போது வரை மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: