புதிய தடுப்பு முகாம் அசாமில் திறப்பு: 68 வெளிநாட்டவர்கள் அடைப்பு

கோல்பாரா: அசாமில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பு காவல் முகாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டவர்களை அடைத்து வைக்க அசாம் மாநிலத்தில் கோபால்பாரா உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பு மையங்கள் உள்ளன. இவை அங்குள்ள சிறை வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அசாமில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2018ல் கோபால்பாரா மாவட்டத்தில் சுமார் 46 கோடி செலவில் 3,000 கைதிகளை தங்க வைக்கும் திறனுடன் பெரிய அளவில் தடுப்பு மையம் கட்டும் பணி தொடங்கியது. இதில் 400 பெண் கைதிகள் தங்கும் வசதியுடன் 15 கட்டிடங்கள் கடந்த 2021ல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்நிலையில்,இந்த புதிய தடுப்பு முகாமிற்கு சந்தேககத்திற்குரியவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என அடையாளம் காணப்பட்ட கைதிகளை மாற்றும் பணியை அசாம் முதல் முறையாக தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 45 ஆண், 21 பெண்கள், ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உட்பட 68 கைதிகள் புதிய தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த தடுப்பு முகாமிற்கு இடமாற்ற முகாம் என புதிய பெயர் சூட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: