சமீபத்தில் மோடியால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயிலில் குப்பை: பயணிகள் மீது ஐஏஎஸ் அதிகாரி கோபம்

புதுடெல்லி: வந்தே பாரத் ரயிலில் பயன்படுத்தப்பட்ட குப்பையை கொட்டியதற்கு ஐஏஎஸ் அதிகாரி உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி,  செகந்திராபாத்-விசாகப்பட்டினம் வரையிலான வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கி  வைத்தார். இந்த ரயில் பெட்டியில் குப்பைகள் கிடந்ததை அடுத்து, அந்த  ரயிலில் பயணம் செய்து ஒருவர் அதனை வீடியோ எடுத்து வைரலாக்கினார். அந்த  வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில், காலி பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட உணவுப் பாத்திரங்கள், பிளாஸ்டிக் பைகள் சிதறிக்கிடக்கின்றன. ஒரு தொழிலாளி ரயில் பெட்டியின் தரைப்பகுதியை சுத்தம் செய்வதற்காக துடைப்பத்தை கையில் வைத்திருப்பதைக் காண முடிந்தது. அவனிஷ் ஷரனின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதால், எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் குப்பை கொட்டியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ரயில்களுக்குள் தூய்மையை பராமரிக்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: