திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 54 பா.ஜ வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்: டவுன் போர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சாகா போட்டி

புதுடெல்லி: திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 54 வேட்பாளர்களின் பட்டியலை பாஜ நேற்று வௌியிட்டது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 60 தொகுதிகள் கொண்ட அங்கு பா.ஜ ஆட்சியில் உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ 55 தொகுதியிலும், கூட்டணி கட்சியான ஐபிஎப்டி 5 தொகுதியிலும் போட்டியிடுகிறது. பா.ஜ சார்பில் 54 தொகுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போதைய திரிபுரா முதல்வர் மாணிக் சாகா டவுன் போர்டோவாலி தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர் பிரதீமா பவுமிக் தன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இடதுசாரிகளின் கோட்டையாக கருதப்பட்ட திரிபுராவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது.

Related Stories: