செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு

பராக்: செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். செக் குடியரசின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில் மிகவும் பிரபலமான  கோடீஸ்வரர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாவெல் வெற்றி பெற்றார். பதிவான 93 சதவீத வாக்குகளில் பாவெலுக்கு 57.4 சதவீத வாக்குகளும், பாபிசுக்கு 42.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

Related Stories: