கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 5 போலீசார் தாக்கியதில் கறுப்பின வாலிபர் பலியானார். இவ்விவகாரத்தால் அமெரிக்க நகரங்களில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவின் மெம்பிஸைச் சேர்ந்த டயர் நிக்கோல்ஸ் (29) என்ற கறுப்பின இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன் போக்குவரத்து விதிமீறல்களை மீறி பயணம் செய்தார். அவரை ரெய்ன்ஸ் சாலை - ரோஸ் சாலை சந்திப்புக்கு அருகில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது டயர் நிக்கோல்சுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  

ஒருகட்டத்தில் 5 போலீஸ்காரர்களும் ஒன்று சேர்ந்து, டயர் நிக்கோல்சை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசாரால் தாக்குதலுக்கு ஆளான டயர் நிக்கோலஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் டயர் நிக்கோல்சை போலீசார் கும்பலாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இவ்விவகாரம் அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆங்காங்காங்கே போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இவ்விவகாரம் தொடர்பாக 5 முன்னாள் போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் கடும் வேதனையை  அளிக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது நியாயமான முறையில் மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த வகை செய்துள்ளது. எனவே போராட்டக்கார்கள்  அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதியை நாடுபவர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

* கலிபோர்னியாவில் 3 பேர் சுட்டுக்கொலை

கலிபோர்னியா பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர். சார்ஜென்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் பெவர்லி க்ரெஸ்டில் அதிகாலையில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததை உறுதிப்படுத்தினார்கள். கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Related Stories: