நியூசிலாந்தில் கனமழை ஏர்போர்ட்டில் வெள்ளம்: நீச்சலடித்து தப்பிய பயணிகள்

வெலிங்டன்: நியூசிலாந்தில் கனமழை பெய்து வருகிறது. அங்கு ஆக்லாந்து ஏர்போர்ட்டில் வெள்ளம் புகுந்ததால் விமான பயணிகள் நீச்சலடித்து தப்பினர். நியூசிலாந்து நாட்டில் பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆக்லாந்து நகரில் நேற்று 3 மணி நேரத்தில் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. உடனடியாக ஆக்லாந்து ஏர்போர்ட் மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டன. விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பலர் நீச்சலடித்து தப்பினர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கார் மற்றும் தாழ்வான இடங்களில் சிக்கிய 126 பேர் மீட்கப்பட்டனர். இந்த வெள்ளத்தில் இதுவரை 3 பேர் பலியாகி விட்டனர்.

ஒருவரை காணவில்லை. நியூசிலாந்து புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் வெள்ளம் பாதித்த ஆக்லாந்து நகருக்கு விமானப்படை விமானம் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டார். நேற்று பிற்பகல் விமான நிலையத்தில் இருந்து வெள்ளம் அகற்றப்பட்டது. உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் சர்வதேச விமான போக்குவரத்து பற்றிய தகவல் இல்லை. ஏனெனில் ஆக்லாந்து விமான நிலையம் முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதைகளை சரி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆக்லாந்து ஸ்மார்ட் ஸ்டேடியத்தில் 40 ஆயிரம் பேர் பங்கேற்க இருந்த எல்டன் ஜான் பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Related Stories: