ஜூடோ ரத்தினம் மரணம்

சென்னை: ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடே ரத்தினம் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. இவர் ஆங்கில படம் உள்பட தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற 9 மொழி படங்களில் 1,200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் 63 கதாநாயகர்களுக்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைத்ததன் மூலம் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி, கமல் ரஜினி, விஜய், அஜித் என மூன்று தலைமுறை நடிகர்களுக்கும் ஸ்டண்ட் பயிற்சி அளித்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம். வயது மூப்பு காரணமாக சொந்த ஊரான குடியாத்தத்தில் வீட்டிலேயே இருந்தார். சில நாட்களாக உடல்நலம் பாதித்தது. இந்நிலையில் அவர் நேற்று பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: